Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி

கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி

ADDED : ஜன 28, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் சார்பில், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெரு மகாலஷ்மி திரையரங்கம் அருகே எஸ்.ஆர்.பார்க் மகாலில், ஜூவல் ஒன் சார்பில், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி நடக்கிறது.

கண்காட்சியில், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகள் 2,000க் கும் அதிகமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் நகைகள் வாங்கும் அனைவருக்கும், சிறப்பு சலு கைகள் மற்றும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதிகளவில் டிசைன்கள் உள்ள இந்த கண்காட்சியில் ரோட்டரி, லயன்ஸ், இன்னீர்வீல், இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து நகைகளை வாங்கி செல்கின்றனர்.

ஜூவல் ஒன் வர்த்தக மேலாளர் ராஜ்கல் பிரபு கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில், ஜூவல் ஒன் சார்பில், நடக்கும் இந்த நகை கண்காட்சியில் எமரால்டு பேக்டரியில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண நகைகள் மற்றும் லைட் வெயிட் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்க நகைகள் ஒரு கிராமிற்கு ரூ.100 தள்ளுபடியுடன் நிச்சய பரிசு வழங்கப்படுகின்றன.

பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கும் எக்ஸ்சேஞ்ச் வசதியும் உள்ளது. இந்த கண்காட்சி இன்றுடன் முடிகிறது என அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us