Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம்

ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம்

ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம்

ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம்

ADDED : ஜூன் 21, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார்.

பொருளாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், துணை முதல்வர் ஜான்விக்டர், உதவி பேராசிரியர் அன்பரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

யோகா ஆசிரியர் விஜயா, மன நலத்திற்கும், உடல் வளத்திற்கும் இந்த பயிற்சி அடிப்படையாக உள்ளது; தினசரி யோகா பயிற்சி செய்வதன் மூலம் நலமுடன் வாழலாம்; என பேசினார்.

மேலும், யோகா செய்யும் வழிமுறைகள் குறித்து கற்பித்தார். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் யோகா பயிற்சி பெற்றனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us