/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூட்டுறவுத்துறை அலுவலர்கள் யோகா பயிற்சி கூட்டுறவுத்துறை அலுவலர்கள் யோகா பயிற்சி
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் யோகா பயிற்சி
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் யோகா பயிற்சி
கூட்டுறவுத்துறை அலுவலர்கள் யோகா பயிற்சி
ADDED : ஜூன் 21, 2025 11:42 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் யோகாதின நிகழ்ச்சி நடந்தது.
இதில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா, ரகு முன்னிலை வகித்தனர்.
இதில், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் அனைவரும் தினமும் அரை மணி நேரம் யோகா பயிற்சி செய்து மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்; யோகா செய்வதன் மூலம் உடல் நலன் நன்றாக இருக்கும்; என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சியில்,கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.