/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 18, 2025 03:50 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீர, தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து மாநில விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழகத்தில் ஆண்டுதோறும் வீர தீர செயல் புரிந்து வரும் சிறந்த பெண் குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 14ம் தேதி பாராட்டு பத்திரமும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படுகிறது. பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் தடுப்பு, வேறு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்தவர்கள், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதனை புரிந்த குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 14ம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசு விருது வழங்கிட , 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து சாதனை விவரங்கள் வரவேற்கப்படுகிறது.
குழந்தையின் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம், ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய வீர, தீர செயல் மற்றும் சாதனைகளை ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைத்து, வரும் 30ம் தேதி மாலை 5:45க்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
விருதிற்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், போலீஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலத்திலும் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.