/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு மின்னணு ஏலம் அறிவிப்பு கள்ளக்குறிச்சியில் 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு மின்னணு ஏலம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு மின்னணு ஏலம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு மின்னணு ஏலம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் 65 ஏரிகளில் மீன்பிடி குத்தகைக்கு மின்னணு ஏலம் அறிவிப்பு
ADDED : செப் 18, 2025 03:51 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 65 ஏரிகளில் மீன்பிடிப்பதிற்கான குத்தகைக்கு மின்னணு ஒப்பந்த புள்ளி ஏலம் நடக்க உள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி வட்டத்தில் முடியனுார், நாகலுார், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம், ஏமப்பேர், வீரசோழபுரம், சிறுவங்கூர் ஆகிய 11 ஏரிகளும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் இருந்தை, களமருதுார், நகர், பாதுார், திருநாவலுார், வெள்ளையூர், ஆத்துார் பெரியஏரி, அலங்கிரி, அரளி, ஆசனுார், காட்டுநெமிலி, ஏ.புத்துார், குஞ்சரம், மேட்டத்துார், பு.கிள்ளனுார், பூ.மலையனுார், பரிக்கல், பில்லுார், செம்பியன்மாதேவி, செங்குறிச்சி, டி.ஒரத்துார், உடையானத்தம், உதுப்பூர், கொரட்டூர், மடப்பட்டு, ப.கீரனுார், பாலி, காட்டுஎடையார், பரமேஸ்வரிமங்கலம் ஆகிய 29 ஏரிகளும், திருக்கோவிலுார் வட்டத்தில் ஆவிகொளப்பாக்கம், எடையூர், எல்ராம்பட்டு, குலதீபமங்கலம், முதலுார், திருப்பாலப்பந்தல், தகடி, மாடம்பூண்டி, விளந்தை ஆகிய 9 ஏரிகளும், சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்துார், தண்டலை, பூட்டை ஆகிய 3 ஏரிகளும், வாணாபுரம் வட்டத்தில் அரியலுார், அத்தியூர், ஜம்படை, கடம்பூர், கடுவனுார், பாசார், பாக்கம், பாவந்துார், திருவரங்கம், வாணாபுரம், சித்தப்பட்டிணம், பல்லகச்சேரி, ரிஷிவந்தியம் ஆகிய 13 ஏரிகள் என மொத்தம் 65 ஏரிகளில் மீன் பிடிப்பதிற்கான குத்தகை ஏலம், http://www.tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு விடப்பட உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தாட்கோ வளாகம், விழுப்புரம்- 605602 முகவரி மற்றும் http://www.tntenders.gov.in/ என்ற இணைய தளத்திலும், 04146-259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.