/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை கைது மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை கைது
மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை கைது
மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை கைது
மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தை கைது
ADDED : செப் 21, 2025 11:38 PM
கச்சிராயபாளையம்,: கச்சிராயபாளையம் அருகே மகனை மண்வெட்டியால் தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் மகன் ராமச்சந்திரன், 32; சென்னையில் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் சரி வர வேலை கிடைக்காததால் 2 மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பி அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை கொளஞ்சியப்பன் தனது மகன் மற்றும் மருமகளிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் ராமச்சந்திரன் தனது வீட்டு வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கொளஞ்சியப்பன் மண் வெட்டியால் ராமச்சந்திரனின் முகத்தில் வெட்டினார். இதில் ராமச்சந்திரனின் முகம் சிதைந்தது. உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று கொளஞ்சியப்பனை கைது செய்தனர்.