/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மொபைல்போன் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது மொபைல்போன் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
மொபைல்போன் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
மொபைல்போன் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
மொபைல்போன் வழிப்பறி 2 வாலிபர்கள் கைது
ADDED : செப் 21, 2025 11:38 PM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே பைக்கில் சென்றவர்களிடம் மொபைல் போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், காவனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் தட்சணா, 24; நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில் திருக்கோவிலுாரில் 'ஏசி' மெக்கானிக் பணியை முடித்துவிட்டு, விழுப்புரம் சென்று கொண்டிருந்தார்.
பில்ராம்பட்டு பிரிவு சாலை அருகே சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர், தட்சணாவை வழிமறித்து அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
தட்சணா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, மொபைல் போன் சிக்கனலை வைத்து கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் வசந்த், 24; ஆறுமுகம் மகன் தாமோதரன், 20; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.