/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ராயப்பனுாரில் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம் ராயப்பனுாரில் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம்
ராயப்பனுாரில் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம்
ராயப்பனுாரில் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம்
ராயப்பனுாரில் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம்
ADDED : செப் 10, 2025 08:49 AM

கள்ளக்குறிச்சி; ராயப்பனுார் ஊராட்சி யில் தி.மு.க., சார்பில் கிளை தோறும் கழகம் என்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
ராயப்பனுாரில் நடந்த கூட்டத்திற்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தாமரைகண்ணன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், ஒற்றுமையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் முகாமின் போது பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகால தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடத்தில் விளக்க வேண்டும். தேர்தலில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி வழக்கறிஞரணி சங்க தலைவர் சேகர், ஒன்றிய துணை செயலாளர்கள் சோலைமுத்து, கண்ரோஸ், தமிழ்ச்செல்வி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பெரியசாமி, சுதா மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் தனபால், பாலன், வேலு மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.