/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோவில் வழிபாட்டில் சாலை மறியல்; 36 பேர் மீது வழக்கு பதிவு கோவில் வழிபாட்டில் சாலை மறியல்; 36 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் வழிபாட்டில் சாலை மறியல்; 36 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் வழிபாட்டில் சாலை மறியல்; 36 பேர் மீது வழக்கு பதிவு
கோவில் வழிபாட்டில் சாலை மறியல்; 36 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 10, 2025 08:49 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே அய்யனார் கோவில் வழிபாட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மணிமுக்தா அணைகரை அருகே பூர்ண புஷ்கலா அய்யனார் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அணைகரைகோட்டாலம் ஆதிதிராவிட சமுதாய மக்கள் வழிபடுவதற்கு முற்பட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து ஆர். டி .ஓ., தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், அணைகரை கோட்டாலம் பகுதி மக்கள் பொங்கல் வைக்காமல் வழிபடுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அணைகரைகோட்டாலம் மக்கள் நேற்று முன்தினம் மேளதாளத்துடன் கோவிலில் வழிபட சென்றனர்.
அப்போது வழிபடுவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது, மேளதாளதாளத்திற்கு அனுமதி இல்லை என வருவாய் துறை மற்றும் போலீசார் தடுத்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் டுபட்டனர். இது தொடர்பாக வி.ஏ.ஓ., பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் மறியலில் ஈடுபட்ட ஆனந்த், வெங்கடேசன், பார்த்திபன், ஹரிகிருஷ்ணன், சண்முகம், ராஜேஸ்வரி, மீனா, ஜோதி உட்பட 36 மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.