/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 10, 2025 11:13 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 5 சதவீத வீடு வழங்கப்படாமல் இருப்பது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்க வே ண்டும், அலுவலகங்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் சாய்வு தள பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலக நுழைவு வாயிலில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினர். தாசில்தார் ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் திவ்யா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.