/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாஸ்து சரியில்லையென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மாற்ற ஏற்பாடு : மக்கள் அதிருப்தி வாஸ்து சரியில்லையென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மாற்ற ஏற்பாடு : மக்கள் அதிருப்தி
வாஸ்து சரியில்லையென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மாற்ற ஏற்பாடு : மக்கள் அதிருப்தி
வாஸ்து சரியில்லையென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மாற்ற ஏற்பாடு : மக்கள் அதிருப்தி
வாஸ்து சரியில்லையென நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மாற்ற ஏற்பாடு : மக்கள் அதிருப்தி
ADDED : செப் 10, 2025 11:13 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வாஸ்து காரணம் காட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முயற்சிப்பாக தகவல் வெளியாகி உள்ளது.
திருக்கோவிலுார் மருத்துவமனை சாலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. நுாறு ஆண்டுகள் பழமையான இக்கட்டடடம், சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
பஸ் நிலையம் அருகில், கிராம மத்தியில் பாதுகாப்பான இடத்தில் இயங்கி வரும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை, வாஸ்து சரியில்லை என கூறி காலி செய்து, சந்தபேட்டையில் உள்ள பயணியர் விடுதிக்கு அலுவலகத்தை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஒருவார காலமாக நல்ல முகூர்த்த நாள் எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருப்பதாக, ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அலுவலகத்தை பயணியர் விடுதிக்கு மாற்றினால், திருக்கோவிலுாரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில்களுக்கு மற்றும் அலுவலகங்களை ஆய்வு செய்ய வரும் உயர் அதிகாரிகள், கலெக்டர் எங்கு தங்குவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாதுகாப்பான இடத்தில் இயங்கிய அலுவலகத்தை திடீர் மாற்றம் செய்ய அதிகாரிகள் முயற்சிப்பதற்கு என்ன காரணம், வாஸ்து சரி இல்லை என்றால் பொதுப்பணித்துறை அலுவலகம் வியாபார ஸ்தலமா, யாருக்கு வருவாய் குறைந்துவிட்டது, ஆள் நடமாற்றம் இல்லாத இடத்தில் அலுவலகத்தை மாற்ற உள்நோக்கம் என்ன என்ற பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது.
இச்செயல் திருக்கோவிலுாரை சீரழிக்கும் மறைமுக நடவடிக்கை என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.