/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு; கலைக்குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு; கலைக்குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு
நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு; கலைக்குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு
நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு; கலைக்குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு
நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க பதிவு; கலைக்குழுக்களுக்கு கலெக்டர் அழைப்பு
ADDED : மார் 22, 2025 08:28 PM
கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் 'நம்ம ஊரு திருவிழா'விற்கு கலைக்குழுக்கள் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு :
கலை பண்பாட்டுத் துறை சார்பில் கோயம்புத்துார், தஞ்சாவூர், வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்பட உள்ளது.
இதில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வழங்கும் கலைக்குழுவினர், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 22ம் தேதி காலை 10:00 மணி முதல் பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்த நாள் தெருக்கூத்து, இசை நாடகம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், மல்லர் கம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்துவோர் பதிவு செய்யலாம்.
தேர்வில் பங்கு பெற விரும்பும் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறை இணையதள (www.artandculture.tn.gov.in) 'கூகுள் பார்ம்' மூலம், இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட பொறுப்பாளர் கவுதமனை, 9952401847 எனும் மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழகத்தில், 8 இடங்களில் நடக்கும் சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்க தேர்வு செய்யப்படுவர்.
சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான குழுவால் தேர்வு செய்யப்பட்டு வரும், 2026 ஆம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் வாய்ப்பு பெறுவர். இந்த வாய்ப்பை
அனைத்து நிகழ்ச்சிக் கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.