/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அறிவிப்பு
ADDED : செப் 10, 2025 08:47 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்கள், தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
உலக சுற்றுலா தினத்தையொட்டி,ஆண்டுதோறும் சுற்றுலா தொழில் முனைவோருக்கு, தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கி வருகிறது. சுற்றுலா ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆப்ரேட்டர், சிறந்த கூடங்கள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, சிறந்த சுற்றுலா கையேடு உள்ளிட்ட 17 வகை விருதுகள், செப்., 27 ம் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.tntourismawards.com இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.