Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தைகள் நலக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : மே 31, 2025 12:28 AM


Google News
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திகுறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கபடுவர்.

விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணியில் குறைந்தது, 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும், 35 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது இணைதள முகவரியான https://dsdcpimms.tn.gov.in பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து வரும் ஜூன் 13ம் தேதி மாலை 5:00 மணிக்குள் இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்:300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் தனித்தனியாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us