ADDED : ஜூன் 28, 2025 12:02 AM

சின்னசேலம் : சின்னசேலத்தில் வாராஹி அம்மனுக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் காமாட்சி அம்பிகா சமேத கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் துவங்கியது. இதில் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை, பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. இந்த வழிபாட்டில், 54 கிலோ இனிப்பு அலங்காரத்துடன் அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, 9 நாட்களுக்கு பல்வேறு வழிபாடுகள் நடக்க உள்ளதாக, கோவில் குருக்கள் கவுதம் தெரிவித்தார்.