ADDED : ஜன 28, 2024 06:20 AM
திருக்கோவிலூர், : திருக்கோவிலூரில் மொபைல் கடையில் பட்டப்பகலில் புகுந்து பணம் திருடியவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
திருக்கோவிலூர், பிடாரி அம்மன் கோவில் தெருவில் மொபைல் கடை நடத்தி வருபவர் சுரேந்திரன், 30; இவர் நேற்று காலை 11:00 மணிக்கு கடையை திறந்து வைத்துவிட்டு, வெளியில் சென்று சிறிது நேரத்தில் திரும்பி கடைக்கு வந்தார்.
அப்போது கடையின் கல்லாவை திறந்து பணத்தை திருடிக் கொண்டு ஓட முற்பட்டவரை சுரேந்திரன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பாவாடைராயன், 35; என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.