Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

ADDED : ஜூன் 02, 2025 12:17 AM


Google News
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் மற்றும் பாசார் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த செந்தில் மனைவி சுமதி, 38; தனது வீட்டின் பின்னால் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, சுமதியை கைது செய்து அவரிடமிருந்த 14 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பாசார் கிராமத்தில் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்பனை செய்த ஆறுமுகம், 63; மற்றும் பூபதி மனைவி உத்திரகுமாரி, 48; ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 13 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us