/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு
நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு
நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு
நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு
ADDED : மார் 14, 2025 07:47 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள நடராஜருக்கு நேற்று மாசி சதுர்த்தசி வழிபாடு நடந்தது.
இதையொட்டி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகருக்கு பூஜைகள் நடந்தன. இதேபோல, கள்ளக்குறிச்சி, சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.