/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முத்தமிழ் சங்கம் மகளிர் தின விழா முத்தமிழ் சங்கம் மகளிர் தின விழா
ADDED : மார் 14, 2025 07:48 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா சமுதாய கூடத்தில் நடந்தது.
முத்தமிழ் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார்.மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் முருககுமார் வரவேற்றார்.செயலாளர் பழனிவேல்,பொருளாளர் அம்பேத்கர்,துணை தலைவர் தாமோதரன், அரிமா மவட்ட தலைவர் வேலு முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற சுங்கம் மற்றும் கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு தமிழக அரசின் விருது பெற்ற அருணா தொல்காப்பியன்,சிறந்த ஊராட்சி தலைவர் விருது பெற்ற அ.பாண்டலம் தலைவர் பாப்பாத்தி நடராஜன் ஆகியோருக்கு வாழ்த்துமடல் வழங்கி பாராட்டி பேசினார்.ரங்கப்பனர் ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜ், கொளஞ்சி கிருஷ்ணமுர்த்தி ஆகியோருக்கு புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் நெடுஞ்செழியன்,தமிழ் சங்க தலைவர் சவுந்தர் ,ரவிச்சந்திரன்,தெய்வநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.கோகுல்ராம் நன்றி கூறினார்.