Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ADDED : ஜூலை 17, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : வேகத்தடை அமைக்கக் கோரி இரவில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில், நிறைமதி கிராமத்தில் உள்ள வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த போதிலும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நேற்று இரவு 8:15 மணிக்கு நிறைமதி வளைவு பகுதியில் எதிரெதிரே வந்த இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர்.

அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி இரவு 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று இரவு 9:10 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us