/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது சின்னசேலம் போலீசார் அதிரடி தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது சின்னசேலம் போலீசார் அதிரடி
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது சின்னசேலம் போலீசார் அதிரடி
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது சின்னசேலம் போலீசார் அதிரடி
தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது சின்னசேலம் போலீசார் அதிரடி
ADDED : ஜூலை 17, 2024 12:48 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை வி.கூட்ரோட்டில் ரோந்து சென்றபோது, அவ்வழியாக வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர்.
அவர்கள், கள்ளக்குறிச்சி அடுத்த திம்மலை கிராமத்தை சேர்ந்த பெருமாள்,45; கண்ணன் மகன்கள் சிவா,30; முருகன்,35; என்பதும், இவர்கள், கடந்த டிச. 22ம் தேதி சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரம் சூரியகுமார் மற்றும் அவரது மனைவி பவானியை கத்தியால் தாக்கி, 5 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றது தெரிந்தது.
கடந்த 2023ம் ஆண்டு மே 22ம் தேதி ஏரவார் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி ஜீவா,36; என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, 7 சவரன் நகை பறித்ததும், அதே ஆண்டு ஜூன் 26ம் தேதி வி.கூட்ரோட்டில் டாஸ்மாக் விற்பனையாளர் ஜெய்கணேஷ்,45; தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.5.87 லட்சம் திருடியதும், கடந்த ஏப்., 24ம் தேதி பூண்டி விநாயகபுரத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது மகன் குமரேசன் வீடுகளில் 8 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாயை திருடி சென்றது தெரிந்தது.
மேலும், எடைக்கல் அடுத்த திருப்பெயர்தக்கா பகுதியில் 3 சவரன் நகைகள் என மூவரும் 23 சவரன் நகைகள் மற்றும் 6.32 லட்சம் ரூபாய் திருடியுள்ளனர்.
இதையடுத்து மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.