ADDED : ஜூலை 09, 2024 11:34 PM
ரிஷிவந்தியம் : அரியலுார் சுடுகாடு அருகே கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பகண்டைகூட்ரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா நேற்று காலை 9.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அரியலுார் சுடுகாடு அருகே, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில் மகன் வேல்முருகன், 21; ராமசாமி மகன் ஆகாஷ், 19; ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 130 கிராம் கஞ்சாவை பகண்டைகூட் ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.