/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிலிண்டர் வெடித்து சிதறியதில் கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதம் சிலிண்டர் வெடித்து சிதறியதில் கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து சிதறியதில் கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து சிதறியதில் கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதம்
சிலிண்டர் வெடித்து சிதறியதில் கூரை வீடு தீ பிடித்து எரிந்து சேதம்
ADDED : ஜூலை 09, 2024 11:34 PM

ரிஷிவந்தியம் : மரூரில் சிலிண்டர் வெடித்து சிதறி கூரை வீடு தீ பிடித்து எரிந்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
வாணாபுரம் அடுத்த மரூர் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் சந்திரசேகர், 48; இவர் புதிதாக வீடு கட்டி வருவதால், பின்புறத்தில், கூரை வீட்டில் சந்திரசேகர் குடும்பத்துடன் தற்காலிகமாக வசிக்கிறார்.
நேற்று காலை 9.15 மணியளவில் சந்திரசேகர் மனைவி அய்யம்மாள் காஸ் அடுப்பில் சமையல் செய்தவாறு, வீட்டிற்கு வெளியே அமர்ந்து காய்கறி வெட்டி கொண்டிருந்தார்.
அப்போது, பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. உடன், வீட்டின் மேற்கூரை தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
அதற்குள், வீட்டிலிருந்த ரூ.45 ஆயிரம் பணம், பீரோ, துணிகள், மின்சாதன பொருட்கள் உட்பட 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.