ADDED : ஜூன் 22, 2024 04:32 AM
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த பயிற்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் சரவணன் பொதுமக்க ளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
குடிநீர் குழியில் கசிவு ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். சுகாதார ஆய்வாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், நீர் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர்.