/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:31 AM

சங்கராபுரம் : விஷ சாராய விற்பனையை கட்டுப்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்ககத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பகத்சிங், ராஜ்குமார், தமிழ்பாலன், லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தப்பட்டது.