/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 05:36 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி ஊதியம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கனி, ஏ.ஐ.டி.யு.சி., தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், மாவட்ட நிர்வாகிகள் கொளஞ்சிவேல், வில்சன், சவுரிராஜன், வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மேல்நிலை நீர்த்தேக்க தோட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், மகளிர் திட்ட தொழிலாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள், அனைத்து திட்ட கணினி இயக்குனர்கள், துாய்மை பாரத இயக்கம், சமூக தணிக்கை, மகளிர் திட்ட மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுனர்கள்.
வட்டார இயக்க மேலாளர்கள் ஆகியோர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை அரசாணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விகிதத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனிசாமி, பிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.