/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
ADDED : ஜூலை 11, 2024 05:33 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி, போலீசார், கடந்தாண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார்.
மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.