/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 12, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிதிராவிட நல நடுநிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் சரண்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் தனம் மணி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அருள்மணி வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கல்வியாளர் செந்தில்குமார், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். இதில் பட்டதாரி ஆசிரியர் ஹேமாவதி, ராமச்சந்திரன், அருண்ராஜ், சேகர், ராஜாமணி, இளையபெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராசு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தவமணி, ஊராட்சி உறுப்பினர் கமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.