/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : ஜூலை 25, 2024 06:37 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜா நகர் சிறுவங்கூர் பூங்காவை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10.5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்குமரம், பெரியவர்கள் நடைபயிற்சி செய்ய நடைபாதை, புல்தரை போன்ற அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டது.
இப்பூங்காவை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்கள் பழுதானது. அத்துடன் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் தொட்டிகள் கட்டப்பட்டு குப்பைகள் கொட்டப்படுகிறது.
இதனால் பூங்காவிற்குள் ஆட்கள் வருவதை முற்றிலுமாக குறைந்து போனது. எனவே, பயனற்று கிடக்கும் சிறுவர் பூங்காவை நகராட்சி அதிகாரிகள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.