Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு விழுப்புரத்தில் சிறப்பு லோக் அதலாத்

உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு விழுப்புரத்தில் சிறப்பு லோக் அதலாத்

உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு விழுப்புரத்தில் சிறப்பு லோக் அதலாத்

உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு விழுப்புரத்தில் சிறப்பு லோக் அதலாத்

ADDED : ஜூலை 08, 2024 05:08 AM


Google News
கள்ளக்குறிச்சி: உச்ச நீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர், மாவட்ட நீதிபதி பூர்ணிமா விடுத்துள்ள செய்திகுறிப்பு:

உச்சநீதிமன்றம் சார்பில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை சிறப்பு லோக் அதலாத் நாடு முழுதும் நடக்கிறது. அதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் திருமண தகராறு, சொத்து பிரச்னை, மோட்டார் வாகன விபத்து கோரிக்கை, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் பிரச்னை, காசோலை பிரச்னை என சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மக்கள் நீதிமன்றத்தின் நோடல் அதிகாரியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் முதன்மை சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்காடிகள் பயன்பெரும் வகையில் நடத்தப்படும் இந்த சிறப்பு லோக் அதலாத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களை விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு அல்லது மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண் 044-25342441/25343363 மற்றும் இலவச அழைப்பு எண் 15100ல் தொடர்பு கொள்ளலாம். tnslsaspllokadalat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us