/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கம்பு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை கம்பு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
கம்பு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
கம்பு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
கம்பு பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : ஜூலை 08, 2024 05:08 AM
கள்ளக்குறிச்சி: கம்பு பயிர் சாகுபடி செய்து கூடுதல் பலனடைய வேண்டும் என விவசாயிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல், உளுந்து மற்றும் மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய பயிரான கம்பு பயிரையே அதிகப்படியான பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
கம்பு பயிரானது, நீர்வளம், மண் வளம் குறைந்த இடங்களிலும், மானாவரி நிலத்திலும் செழித்து வளரக் கூடியது.
சந்தையில் அதிகம் வரவேற்கப்படும் இந்த கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம்.
இம்மாவட்டத்தில் கம்பு பயிர் மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணுாட்ட கலவை. உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வேளாண் துறை மூலம் வழங்கப்படுகிறது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.
மேலும் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இம்மாவட்டத்தின் அனைத்து வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், இம்மழையை பயன்படுத்தி கம்பு பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். அத்துடன் திட்டம் சார்ந்த விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.