/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டி தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டி
தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டி
தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டி
தென்னிந்திய அளவிலான கால் பந்தாட்ட போட்டி
ADDED : ஜூலை 06, 2024 05:36 AM
சின்னசேலம்: சின்னசேலத்தில் தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டி நேற்று துவங்கியது.
சின்னசேலம் நண்பர்கள் கால்பந்தாட்ட குழு மற்றும் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில் 58ம் ஆண்டையொட்டி தென்னிந்திய அளவிலான இருபாலர் கால்பந்தாட்டம் நேற்று 5ம் தேதி துவங்கியது. இரவு, பகல் ஆட்டமாக மின் ஒளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. போட்டியில் தமிழகம் முழுதுமிருந்தும் கால்பந்தாட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை 7ம் தேதி வரை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஆண்களுக்கான பிரிவில் முதல் பரிசாக 50,024 ரூபாய், இரண்டாவது பரிசு 30,024, மூன்றாவது பரிசு 20,024, நான்காவது பரிசு 15,024 ரூபாய் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு 40,024, இரண்டாவது பரிசு 30,024, மூன்றாவது பரிசு 20,024, நாலாவது பரிசு 15,024 ரூபாய் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மணிவண்ணன், முகமது ரபீக், ரமேஷ், ஹரி சலீம், பாண்டியன், குருமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.