/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 06, 2024 05:37 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மல்லாபுரத்தில் சிலர் ஓடை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று, மண்டல துணை தாசில்தார் ராமசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன், வி.ஏ.ஓ., தஸ்தகீர், ஊராட்சி செயலாளர் திருமால்வளவன் ஆகியோர் முன்னிலையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.