/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : மார் 14, 2025 07:42 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், அலுவலகங்கள் வெறிச்சோடின.
மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், மொத்தம் 669 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள, 217 அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.