ADDED : மார் 14, 2025 07:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிர்வாக ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் வருவாய் துறை அலுவலர்களின் ஆய்வுகள், கோர்ட் வழக்குகள், தகவல் அறியும் உரிமை சட்டம், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் சட்டம், சாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் குறித்து குறித்து ஆய்வு நடந்தது.
மேலும் பேரிடர் நிவாரண உதவிகள், பொதுவினியோக திட்ட பணிகள், விபத்து நிவாரண உதவித் தொகை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு வருவாய் துறை சேவை பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்; இணையவழி சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும்; அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேரும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டர் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.