ADDED : மார் 14, 2025 07:41 AM
அவதி
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பஸ் நிலையம் அருகில், தேசிய நெடுஞ்சாலையோரம் குட்டைபோல் நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமன், தச்சூர்
குப்பை பிரச்னை
கனியாமூர் அருகே உள்ள கோமுகி ஓடை உயர்மட்ட பாலத்தில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. பெரியசாமி, கனியாமூர்
பயன்பாடில்லாத நிழற்குடை கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பஸ் நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றிலும் புற்கள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.
ஆறுமுகம், உலகங்காத்தான்
மோசமான சாலைகள்
ஈருடையாம்பட்டிலிருந்து ஆற்கவாடி செல்லும் சாலை, படுமோசமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஜான் பால், ஆற்கவாடி காட்டு கொட்டாய்
சாலை வசதி
பொரசப்பட்டிலிருந்து சுத்தமலைக்கு செல்லும் சாலையில் ஜல்லிகள் கொட்டி நிரப்பி ஆண்டுகள் ஆகியும் அவற்றுக்கு தார் ஊற்றாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
அன்பரசு, சுத்தமலை .
வாய்க்கால் சீரமைப்பு
திருக்கோவிலூரில் ஆவியூரான், சித்தேரியான் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜ், வடிவேல் நகர், திருக்கோவிலூர்.
சுகாதார சீர்கேடு
குடமுருட்டி, தென்பெண்ணை ஆற்றில் பலர், 'டெண்ட்' போட்டு பன்றிகள் வளர்ப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கணேசன், தபோவனம்.