/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மறுபிறவி எடுத்துள்ளோம்: வீடு திரும்பியவர்கள் கண்ணீர் மறுபிறவி எடுத்துள்ளோம்: வீடு திரும்பியவர்கள் கண்ணீர்
மறுபிறவி எடுத்துள்ளோம்: வீடு திரும்பியவர்கள் கண்ணீர்
மறுபிறவி எடுத்துள்ளோம்: வீடு திரும்பியவர்கள் கண்ணீர்
மறுபிறவி எடுத்துள்ளோம்: வீடு திரும்பியவர்கள் கண்ணீர்

டாஸ்மாக் மூடுவது மட்டுமே தீர்வு
முருகன், 58; கருணாபுரம்: மூட்டை துாக்கும் தொழிலாளியான நான் உடல் வலிக்காக சாராயம் குடித்தேன். மெத்தனால் கலந்திருப்பது தெரியாது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணமடைந்தேன். உடல் வலி சரியாகவில்லை. இனி என்னால் மூட்டை துாக்கும் வேலைக்கு செல்ல முடியாது. வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயிர்பிழைத்ததே பெரிய விஷம். சாராய விற்பனை ஒழிப்பதும், டாஸ்மாக் கடை மூடுவது மட்டுமே இப்பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை
சாரதா, 35; கருணாபுரம்: நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். அசைவ உணவு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது. இதற்காக ஓமந்திராகம் வீட்டில் வைத்திருப்பேன். 19ம் தேதி காலை எனது கணவர் முருகன் சாராயம் குடித்து விட்டு, சிறிதளவு பாட்டிலில் வைத்திருந்தார். வீட்டு வேலை முடிந்து வந்த நான், ஓமந்திராகம் என நினைத்து பாட்டிலில் இருந்த சாராயத்தை குடித்துவிட்டேன்.
ஜென்மத்திற்கும் தொடமாட்டேன்
பரமசிவம், 55; கருணாபுரம்: கள்ளக்குறிச்சியில் கூலி வேலை செய்து வரும் நான் எப்போதாவது மது அருந்துவேன். கடந்த 18ம் தேதி இரவு மற்றும் 19ம் தேதி அதிகாலையில் கருணாபுரம் பகுதியில் விற்பனையான சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்தேன். சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.
மறுபிறவி எடுத்துள்ளேன்
சத்யா, 27; கருணாபுரம்: நானும், எனது கணவர் மணியும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறோம். மதியழகன், 7; தங்கதுரை, 4; என இரு மகன்கள் உள்ளனர். சொந்தமாக வீடு இல்லை. கடந்த 19ம் தேதி மெத்தனால் கலந்த சாராயம் என்பது தெரியாமல் குடித்து விட்டேன். சிறிது நேரத்திலேயே உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர்.