/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கார் கவிழ்ந்து வாலிபர் பலி சின்னசேலம் அருகே பரிதாபம் கார் கவிழ்ந்து வாலிபர் பலி சின்னசேலம் அருகே பரிதாபம்
கார் கவிழ்ந்து வாலிபர் பலி சின்னசேலம் அருகே பரிதாபம்
கார் கவிழ்ந்து வாலிபர் பலி சின்னசேலம் அருகே பரிதாபம்
கார் கவிழ்ந்து வாலிபர் பலி சின்னசேலம் அருகே பரிதாபம்
ADDED : ஜூன் 24, 2024 05:04 AM
கள்ளக்குறிச்சி ; சின்னசேலம் அருகே சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.
செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தினேஷ்குமார், 21; இவரது நண்பர்கள் சேகர் மகன் கோபிநாத், 20; தேசிங்கு மகன் பரணி, 20; பாலு மகன் பிரபாகரன், 22; இவர்கள் நால்வரும் டொயோட்டா எட்டியாஸ் காரில், நேற்று அதிகாலை 2:45 மணியளவில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்றனர். காரை பிரபாகரன் ஓட்டினார்.
சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார். அதில், கார் நிலை தடுமாறி சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.