/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்
ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்
ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்
ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்
ADDED : ஜூலை 04, 2024 11:42 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சத்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இக்கோவிலில், 59ம் ஆண்டு ராமநவமி வசந்தோற்சவ விழா கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, 7:30 மணிக்கு பரனுார் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் குமாரர் ஸ்ரீ ஹரி உபன்யாசம் நடக்கிறது.
நேற்று முன்தினம் மாலை சுவாமி வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை மாலை 6:00 மணிக்கு சீதா, லட்சுமண, அனுமந்த சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமிகள் ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளி, திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.