/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 16, 2024 07:29 AM
கள்ளக்குறிச்சி: குரால் மேற்கு காட்டுகொட்டாய் பகுதியில் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம் அடுத்த குரால் மேற்கு காட்டுகொட்டகை பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள், ஆட்டுபண்ணையை ஒட்டியவாறு உள்ள வழித்தடத்தை பயன்படுத்தி வெளி பகுதிக்கு சென்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆட்டு பண்ணையை சுற்றி வேலி அமைத்தார். இதனால், காட்டுகொட்டகை பகுதி மக்கள் விளைநிலத்தில் உள்ள நடைபாதை வழியாக வெளி பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இது தொடர்பாக, இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வழிப்பாதையை மறித்து போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மாலை 4:00 மணியளவில் அப்பகுதியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நைனார்பாளையம் குறுவட்ட ஆய்வாளர் ருத்ரகுமார் மற்றும் அலுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இதையடுத்து இரவு 8:00 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.