/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
ADDED : ஜூன் 08, 2024 05:36 AM

சின்னசேலம், : சின்னசேலம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சேவை அமைப்புகள் சார்பில், சீருடைகள் வழங்கப்பட்டது.
சின்னசேலம் பேரூராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 80 பெண்கள் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தினமும் சின்னசேலம் பேரூராட்சியின் அனைத்து பகுதிகளும் வீடுகள், வணிக நிறுவனங்கள் என, அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.
மேலும் அவைகளை வகைப்படுத்தி வெளிப்படுத்தி பேரூராட்சி உரக்கிடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பணிகளை பாராட்டி இப்பகுதியை சேர்ந்த பல்வேறு சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து 80 பேர்களுக்கும் சீருடைகளை வழங்கினர்.
பேரூராட்சி செயலாளர் மோகனரங்கன், துப்புரவு ஆய்வாளர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.