Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 41,619 பேர் தேர்வு எழுத முன்னேற்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 41,619 பேர் தேர்வு எழுத முன்னேற்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 41,619 பேர் தேர்வு எழுத முன்னேற்பாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு 41,619 பேர் தேர்வு எழுத முன்னேற்பாடு

ADDED : ஜூன் 08, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 9ம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வில் 41,619 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குருப் 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை 9ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்வுகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை பேசியதாவது:

குரூப் 4க்கான எழுத்துத் தேர்வு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக் கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 5 வட்ட மையங்களில் 139தேர்வுக் கூடங்களில் 41,619 விண்ணப்பதாரர்கள் எழுத உள்ளனர்.

தேர்வாளர்கள் முறைகேட்டினைத் தடுக்கும் பொருட்டு 11 பறக்கும் படை அலுவலர்கள், 179 காவல் அலுவலர்கள், 143 ஒளிப்பட பதிவாளர்கள், 138 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 34 சுற்றுக்குழு உறுப்பினர்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு பணிகளில் ஈடுபடும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள், வட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பு ஆய்வாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், சுற்றுக்குழு உறுப்பினர்கள் தேர்வாணையம் குறிப்பிட் டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடத்திட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.

டி.ஆர்.ஓ., சத்தியநாரா யணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழுப்புரம்


விழுப்புரத்தில் 73 மையங்களில் 26,578 பேரும், செஞ்சியில் 24 மையங்களில் 6,619, கண்டாச்சிபுரத்தில் 9 மையங்களில் 2,748, மரக்காணத்தில் 9 மையங்களில் 2,007, மேல்மலையனூரில் 6 மையங்களில் 1,900, திருவெண்ணைநல்லுாரில் 13 மையங்களில் 3,777, திண்டிவனத்தில் 30 மையங்களில் 10,361, வானுாரில் 20 மையங்களில் 5,391, விக்கிரவாண்டியில் 16 மையங்களில் 4,725 பேர் என, மாவட்டம் முழுவதும் 200 மையங்களில், 64,106 பேர் எழுத உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை, விழுப்புரம் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமையிலான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us