ADDED : மார் 14, 2025 07:39 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடி சேர்ந்த முனியப்பிள்ளை மகள் வினோதினி,23; கடந்த, 8 ம் தேதி இரவு 7:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.