/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
ADDED : ஜூன் 18, 2024 11:58 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் செல்வம், வைத்திலிங்கம், துணை தலைவர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முத்துவேல், தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் பழனி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
இதில் லோக்சபா தேர்தல் காரணமாக நிறுத்தி வைத்த தேசிய ஊரக வேலை திட்டத்தை உடனடியாக துவக்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
அவர்களிடம் டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை தொடர்பாக எடுத்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.