Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ்நிலையம் விரிவாக்க பணி குறித்து சின்னசேலத்தில் அலுவலர்கள் ஆய்வு

பஸ்நிலையம் விரிவாக்க பணி குறித்து சின்னசேலத்தில் அலுவலர்கள் ஆய்வு

பஸ்நிலையம் விரிவாக்க பணி குறித்து சின்னசேலத்தில் அலுவலர்கள் ஆய்வு

பஸ்நிலையம் விரிவாக்க பணி குறித்து சின்னசேலத்தில் அலுவலர்கள் ஆய்வு

ADDED : ஜூன் 05, 2024 11:13 PM


Google News
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னசேலம் பேரூராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பஸ்நிலையம், வணிக வளாகம் கட்டப்பட்டது. அரசு பஸ் டெப்போ சார்பில், சின்னசேலத்தில் இருந்து 19 வெளிமாவட்ட பஸ்களும், 13 டவுன் பஸ்களும் இயக்கப்படுகிறது.

மேலும், சேலம் - சென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து தலைவாசல் வழியாக திருச்சி செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் சின்னசேலம் பஸ்நிலையம் வழியாக செல்கிறது.

இந்நிலையில், சின்னசேலம் பஸ் நிலையம் குறுகிய நிலையிலும், போதிய வசதிகள் இல்லாமலும் உள்ளது. இதனால் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. வணிக வளாகத்தில் உள்ள கடைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இதனால், சின்னசேலம் பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஸ் நிலையத்தை விரிவு படுத்துவதற்கான வரைபடம் தயாரித்தல், திட்ட மதிப்பீடு தொடர்பாக பேரூராட்சி துறை மண்டல உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரமேஷ், இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us