/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சின்னசேலத்தில் காணாமல்போன 5 ஏக்கர் கோவில் நிலம் கண்டுபிடிப்பு சின்னசேலத்தில் காணாமல்போன 5 ஏக்கர் கோவில் நிலம் கண்டுபிடிப்பு
சின்னசேலத்தில் காணாமல்போன 5 ஏக்கர் கோவில் நிலம் கண்டுபிடிப்பு
சின்னசேலத்தில் காணாமல்போன 5 ஏக்கர் கோவில் நிலம் கண்டுபிடிப்பு
சின்னசேலத்தில் காணாமல்போன 5 ஏக்கர் கோவில் நிலம் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:13 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் கணக்கில் இருந்து காணாமல்போன சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் கோவில் நிலம் பல ஆண்டுகளுக்கு பின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான ஆவணங்களை அறங்காவலர் சிங்காரவேல் சரிபார்த்தபோது, கோவிலுக்கு சொந்தமாக 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் இருப்பது தெரியவந்தது. இந்த இடம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்த தகவல் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து கோவில் நிலத்தை கண்டுபிடித்து அளவீடு செய்து தருமாறு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சிங்காரவேல் கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து அம்மையகரம் வி.ஏ.ஓ., தர்மராஜ் உதவியுடன் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு இடம் குறித்து அறநிலையத்துறை தனி தாசில்தார் மனோஜ்முனியன் ஆய்வு செய்தார்.
அதில் அம்மையகரம் பஸ் நிறுத்தம் அருகே சேலம் - சென்னை தேசிய புறவழச்சாலையை ஒட்டியவாறு கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் பயன்பாட்டியின்றி முட்புதர்கள் நிறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறநிலையத்துறை ஆய்வாளர் திருமூர்த்தி, நில அளவையர்கள் சிவராஜன், கபிலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மூலம் இடத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டது.
தொடர்ந்து முட்புதர்கள் அகற்றப்பட்டு இடத்தை சுத்தம் செய்து கோவில் நிர்வாகத்தின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியவாறு உள்ள இந்த இடத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பில் உள்ளதால் பொது ஏலம் மூலம் குத்தகை விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த முருகன், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.