/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது கலெக்டரிடம் எம்.எல்.ஏ., மனு
ADDED : ஜூலை 20, 2024 05:54 AM

கள்ளக்குறிச்சி: விவசாயிகளை பாதிக்கும் வகையில் நிலங்களை கையகப்படுத்த கூடாது என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலெக்டர் பிரசாந்திடம் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலுார் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலத்தை, அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் அளவீடு செய்து வருகின்றனர்.
வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை கையகப்படுத்தி, கார்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க உள்ளதாக தகவல் அறிந்த விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே, நிலம் கையகப்படுத்துதல் சம்மந்தமான முழு விபரங்களை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக அப்பகுதி மக்கள் விவசாயத்தை முழுமையாக நம்பி வாழ்வதால், ஜீவனம் செய்ய வேறு தொழிலும் இல்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய வகையில் நிலம் கையகப்படுத்த கூடாது. இவ்வாறு அதில் உள்ளது.
அப்போது, அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.