/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ.,பேச்சுவார்த்தை சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ.,பேச்சுவார்த்தை
சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ.,பேச்சுவார்த்தை
சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ.,பேச்சுவார்த்தை
சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ.,பேச்சுவார்த்தை
ADDED : ஜூலை 13, 2024 06:28 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வீஸ் சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை நான்கு வழி சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகர் பகுதியில் சாலை விரிவாகத்தின் போது சாலையோர வீடுகள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
அது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு மேலும் அளவீடு பணிகள் நடைபெற்றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் பின்பு பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனை சந்திக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த எம்.எல்.ஏ., நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சமரசம் பேசினார்.
அப்பொழுது அண்ணாநகர் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் அது மட்டும் இல்லாமல் சாலையோரம் உள்ள இடிக்க நேரிடும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதாகவும் அறிவித்தார்.அதுவரை இப்பகுதியில் உள்ள பொதுமக்களை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடக் கூடாது என்றும் மீண்டும் இப்பகுதியில் சாலை மறு அளவிடு செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இதன் பின் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.