ADDED : ஜூலை 04, 2024 09:55 PM

கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் நடந்த மருத்துவ முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட்டது.
அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தாய், சேய் நல அலுவலர் சின்னபொண்ணு, வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார்.
முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட்டது. வரும் 31ம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 878 குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. 6 மாதம் முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி., அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி., அளவும் வழங்கப்படும்.
முகாமில், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.