Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 'தினமலர் பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

'தினமலர் பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

'தினமலர் பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

'தினமலர் பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கல்

ADDED : ஜூலை 04, 2024 09:56 PM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் பட்டம்' நாளிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தி.மு.க., நகர செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டேனியல்ராஜ் மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், 'அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு, உலக நடப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களாகிய உங்களுக்காக 'தினமலர்' நாளிதழ் பட்டம் இதழை வெளியிடுகிறது.

மாணவர்கள் தவறாமல் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். கல்வி சேவையாற்றும் 'தினமலர்' நாளிதழ் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்' என்றார்.

கவுன்சிலர்கள் சாந்தி மதியழகன், மனோபாலன், உதவி தலைமை ஆசிரியர் மோகன்ராம், முதுகலை ஆசிரியர்கள் பாண்டியன், ராஜவேல், பிரேமா, கோதாவரி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ விநாயகா மெட்ரிக் பள்ளி


நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் நமச்சிவாயம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' வழங்கி பேசுகையில், 'மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு 'தினமலர்' நாளிதழ் வழங்கும் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் உதவியாக இருக்கும்.

தினமலரின் சேவை மனப்பான்மையை பாராட்டுகிறேன். 'தினமலர் பட்டம்' இதழை மாணவர்கள் தினசரி படித்து மனதில் பதிய வைத்தால் அது எதிர்காலத்திற்கு உதவும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us